அதையடுத்து, இட ஒதுக்கீட்டை உயர்த்தும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருப்பது பற்றியும், பீகாரின் கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவித்திருப்பது பற்றியும் முதல்வர் நிதிஷ் குமார் விளக்க ஆரம்பித்தார். அப்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் பெண் எம்.எல்.ஏ ரேகா பஸ்வான் குறுக்கிடுவதற்காக எழுந்ததைக் கண்டு கோபப்பட்ட நிதிஷ் குமார், “நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாதா… பாருங்கள் அந்தப் பெண் பேசுகிறார்.


எதிர்க்கட்சியினர் பெண்களுக்கு எதாவது செய்திருக்கிறார்களா… நாங்கள் பேசுவோம், நீங்கள் கேட்கவில்லையென்றால் அது உங்களின் பிரச்னை. சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு இந்த அரசு நிறைய செய்திருக்கிறது” என்றார்.
இதற்கு தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில் எதிர்வினையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “ `நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாதா?’. பெண்களுக்கு எதிராக மலிவான, தேவையற்ற, நாகரீகமற்ற மற்றும் கீழ்த்தரமான கருத்துகளை வெளியிடுவது முதல்வர் நிதிஷ் குமாரின் வழக்கமாகிவிட்டது.

