ஒருபக்கம் தே.ஜ.கூட்டணியில் பாமக, சமூக ரீதியாக வாக்குகள் கிடைக்கும் என நம்பும் பலம் கொண்ட தொகுதியில் களமிறங்குகிறது. அதிமுக ரேஸில் இருந்து விலகி இருப்பதால், திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறாமல் பாமக-வால் குறிவைக்க முடியும். கூடுதலாக வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தையும் இந்த தேர்தலில் கையில் எடுத்துள்ளது பாமக. “வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு. திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும்.” என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வன்னியர் சமூக வாக்குகளையும் திமுக எதிர்ப்பு வாக்குகளையும் முழுமையாக குறிவைக்கிறது பாமக என்பது தெரிகிறது.
மறுபக்கம் திமுக கூட்டணி… நீண்ட காலமாக ஒரே அணியாக நீடிக்கும் கூட்டணி கட்சிகள் அவர்களுக்கு பலமாக உள்ளது. இதனால் களத்தில் கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்றுகிறார்கள். கூடுதலாக ஆளும் கட்சி என்ற பலம். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் மக்க|ளவைத் தொகுதிக்குள்ளாக வரும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வி.சி.க 72,188 வாக்குகளையும், அ.தி.மு.க 65,825 வாக்குகளையும், பா.ம.க 32,198 வாக்குகளையும் பெற்றிருக்கிறது. இப்போது திமுக-வே நேரடியாக நிற்பதாலும், அமைச்சர்கள் படை களமிறக்கப்பட்டிருப்பதாலும் பெரிய அளவில் வாக்குகளை வேட்டையாட வேண்டும் என வேலை செய்கிறார்கள்.
மேலும் நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றபிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அவர்களும் தீவிரமாக களத்தில் பணியாற்றி வருகிறார்கள். இந்த தேர்தலில் நாம் தமிழர் பிரிக்கும் வாக்குகளும் இரு கூட்டணிகளும் கருத்தில் கொண்டிருக்கும் என்கிறார்கள்.
இப்படியாக விக்கிரவாண்டி தேர்தல் களம் அனல் தகிக்கும் களமாகவே இருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88