`பாராமதி’-யில் மீண்டும் `பவார்’ குடும்பத்தினர் மோதல்..?! – இம்முறை சட்டமன்ற தேர்தலில்! | Ajit Pawar’s decision to field his son in Baramati assembly seat

மகாராஷ்டிராவில் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாநில அரசு மக்களவைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து பல்வேறு புதிய நலத்திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இத்திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக சட்டமன்ற தேர்தல் அக்டோபரில் இருந்து நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதம் தீபாவளி முடிந்த பிறகு இத்தேர்தல் இருக்கும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு சரத் பவார் மகள் சுப்ரியாவிடம் தோல்வியடைந்தார். இதனால் பாராமதி தொகுதி மீது அஜித் பவாருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தனது மனைவியை தேர்தலில் நிறுத்தியது தவறு என்று அஜித் பவார் சமீபத்தில் அறிவித்தார்.

மகனுடன் அஜித்பவார்மகனுடன் அஜித்பவார்

மகனுடன் அஜித்பவார்

அதோடு வரும் சட்டமன்ற தேர்தலில் பாராமதி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதில்லை என்று அஜித் பவார் முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அஜித்பவார் அளித்த பேட்டியில், “நான் 7 முதல் 8 தேர்தலில் போட்டியிட்டுவிட்டேன். தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்தார். உங்களது மகன் ஜெய் பவார் பாராமதியில் போட்டியிடுவாரா என்று கேட்டதற்கு, “இது ஜனநாயகம். இது தொடர்பான திட்டம் வந்தால் கட்சியின் பாராளுமன்ற குழு அதனை பரிசீலிக்கும். ஜெய் பவாரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று மக்களும், கட்சியின் பாராளுமன்ற குழுவும் விரும்பினால் கட்சி அவரை தேர்தலில் நிறுத்தும்”‘ என்றார்.

ஏற்கனவே அஜித் பவார் குடும்பத்தில் இருந்து அவரது மனைவி சுனேதிரா பவார் ராஜ்ய சபை உறுப்பினராகிவிட்டார். அஜித் பவார் எம்.எல்.ஏ.வாகவும், துணை முதல்வராகவும் இருக்கிறார். அவரது மூத்த மகன் பாரத் பவார் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இப்போது கட்சியை வளர்ப்பதில் பாரத் பவார் ஈடுபட்டுள்ளார். இப்போது அஜித் பவார் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராமதியில் இளைய மகன் ஜெய் பவாரை நிறுத்த அஜித் பவார் திட்டமிட்டுள்ளார். பாராமதி சட்டமன்ற தொகுதியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பாக அஜித் பவாரின் சித்தப்பா மகனை நிறுத்த சரத் பவார் திட்டமிட்டுள்ளார். இதனால் மீண்டும் பாராமதியில் சரத் பவாரின் உறவினர்கள் மோதிக்கொள்ள இருக்கின்றனர் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அஜித் பவார் தற்போது மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *