பாலியல் வன்கொடுமை; 8-ம் வகுப்பு மாணவி பலி… ரூ.30,000 கொடுத்து மூடி மறைக்க முயன்ற ஆசிரியர் | 14 year old minor girl died after her school teacher raped him

பின்னர், பாதிக்கப்பட்ட மாணவி அவமானத்துக்குப் பயந்து யாரிடமும் கூறாமல் மறைத்திருக்கிறார். ஆனால், பாலியல் வன்கொடுமையால் அவரின் உடல்நிலை மோசமடையவே, சத்தீஸ்கரிலுள்ள அத்தை வீட்டுக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல்நிலை மேலும் மோசமடைந்தது. ஒருகட்டத்தில் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையைத் தனது அத்தையிடம் கூறிவிட்டார். இதையறிந்த, ஆசிரியர் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக மாணவியின் குடும்பத்திடம் ரூ.30,000 கொடுத்திருக்கிறார். அவர்களும், வெளியில் தெரிந்தால் அவமானம் என்று பயந்து போலீஸில் புகாரும் அளிக்கவில்லை.

உயிரிழப்புஉயிரிழப்பு

உயிரிழப்பு
சித்திரிப்புப் படம்

ஆனால், மாணவியின் உடல் நாளுக்கு நாள் மோசமடையவே அவரின் தந்தை கடந்த ஜூலை 10-ம் தேதி போலீஸில் புகாரளித்தார். அதைத்தொடர்ந்து, ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸ், தலைமறைவாக இருக்கும் அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்தது. இவ்வாறிருக்க, வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் 20 நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த மாணவி கடந்த செவ்வாய்க் கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னும் அந்த ஆசிரியர் கைதுசெய்யப்படாத நிலையில், விரைவில் அவர் கைதுசெய்யப்படுவார் என மூத்த போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *