`புது கார் அல்லது ரூ.12 லட்சம்..!’ – சேவை குறைபாடு வழக்கில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி | In a case on service issue, consumer court order to car company

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தைச் சேர்ந்தவர் மணி பாலகுமார். இவர் திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் உள்ள பிரபல நான்கு சக்கர வாகன விற்பனையாளரிடம் ரூ. 12 லட்சத்தில் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதை, அவர் முறையாக விற்பனையாளரிடமே சர்வீஸூம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சர்வீஸ் செய்த பிறகும், என்ஜின் ஆயில் அளவைக் காட்டும் பகுதியில் எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்த வண்ணமே இருந்துள்ளது. இதுகுறித்து, அவர், கார் விற்பனையாளரிடம் கேட்டபோது, சிறிது நேரத்தில் தானாகவே அணைந்து விடும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், திடீரென காரின் இன்ஜின் முழுமையாக ஓடாமல் செயலிழந்து நின்று விட்டது. சுமார் 12 லட்சம் செலவு செய்து வாங்கிய கார் ஒரு ஆண்டுக்குள்ளாகவே பழுதடைந்துவிட்டதால், தனது பழைய காரை பெற்றுக் கொண்டு, புதிய கார் வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு வாகன விற்பனையாளர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் சட்டம் - இழப்பீடுநுகர்வோர் சட்டம் - இழப்பீடு

நுகர்வோர் சட்டம் – இழப்பீடு

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணி பாலகுமார், வழக்கறிஞர் மூலம் விளக்கம் கோட்டு சட்ட அறிவிப்பு அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கும் வாகன விற்பனையாளர் தரப்பில் இருந்து முறையான பதில் கிடைக்கப் பெறாததால், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ. சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, பழுதான நான்கு சக்கர வாகனத்துக்கு பதிலாக புதிய நான்கு சக்கர வாகனம் அல்லது வாகனத்தின் விலையான ரூ. 12 லட்சத்தை வழங்கவும், சேவைக்குறைபாடு, மன உளைச்சல் போன்றவற்றுக்கு நஷ்டஈடாக ரூ. 50 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் இரண்டு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் வழக்குத் தொடர்ந்த காலகட்டமாக 29.03.2016 முதல் வழங்கும் தேதி வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியில் மேற்குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உத்தரவிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *