புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையில் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1973 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் கட்டி முடிக்கப்பட்ட அண்ணா மேம்பாலம் கடந்தாண்டு பொன்விழா ஆண்டை நிறைவு செய்தது. பொன் விழா ஆண்டையொட்டி 10.85கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட அண்ணா மேம்பாலம் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அண்ணா மேம்பாலம் கீழே உள்ள பூங்காக்கள் புதுப்பொழிவுடனும், தூண்கள் கான்கிரிட் கொண்டும், பாலம் முழுவதும் வண்ணப்பூச்சுகள் பூசப்பட்டு புனரமைக்கப்பட்டது.  திறப்பு விழாவையொட்டி வண்ண விளக்குகளால்  அண்ணா மேம்பாலம் அலங்கரிக்கப்பட்டது. பாலத்திற்கு கீழே வைக்கப்பட்ட அண்ணா சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

விளம்பரம்

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  தமிழகத்தின் முதல் சாலை மேம்பாலமான அண்ணா மேம்பாலம் கடந்த 1969-ல் முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பேற்ற பின் திட்டமிடப்பட்டு, வடிவமைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய மேம்பாலமாகும். கடந்த 1970-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த அந்தப் பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை சாலை, ஜி.என்.ஷெட்டி சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அந்த நெரிசலை நீக்கி அப்பகுதியில் சுகமான சாலைப் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது.

விளம்பரம்

அப்போது ரூ.66 லட்சம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட பாலத்தை, 1973 ஜூலை 1-ம் தேதி கருணாநிதி திறந்து வைத்தார். சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுமே கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சாலை சந்திப்பில் முதன் முதலாகக் கட்டப்பட்ட மேம்பாலம் இது.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பது தற்கொலைக்கு சமம் – அமைச்சர் துரைமுருகன்

ஜெமினி ஸ்டுடியோ அப்பகுதியில் அமைந்திருந்ததையொட்டி அப்பாலத்தைக் குறிப்பிடும்போது, “ஜெமினி மேம்பாலம்” என்று கூறப்பட்டது. ஆனால், அன்றைய நிலையில் நாட்டிலேயே 3-வது பெரிய மேம்பாலமான அதற்கு “அண்ணா மேம்பாலம்” என கருணாநிதி பெயர் சூட்டினார்.

விளம்பரம்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *