புனே பீர் பாரில் அதிகாலை வரை போதை பார்ட்டி; 8 பேர் கைது – புல்டோசரை பயன்படுத்த முதல்வர் உத்தரவு | Drug party till 4am at Pune beer bar: 8 arrested: CM orders to use bulldozer

புனேயில் ஐ.டி.நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கிறது. இதனால் புனேயில் உள்ள பீர் பார்கள் மற்றும் பப்கள் அதிகாலை வரை சட்டவிரோதமாக இயங்குகின்றன. அரசு 1.30 மணி வரை மட்டுமே பீர்பார்கள் இயங்க அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த விதிகளைப்பற்றி கவலைப்படாமல் பார் உரிமையாளர்கள் அதிகாலை வரை பார்களை நடத்துகின்றனர். சமீபத்தில் அது போன்ற ஒரு பாரில் மைனர் ஒருவர் மது அருந்திவிட்டு கண்மூடித்தனமாக கார் ஓட்டி பைக்கில் சென்றவர்கள் மீது மோதினார். இதில் பைக்கில் சென்ற இரண்டு பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் புனேயில் உள்ள பார் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் வாஷ்ரூம்பில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. உடனே போலீஸார் புனே பெர்குஷன் கல்லூரி சாலையில் செயல்படும் பீர் பார் மற்றும் பெர்மிட் ரூம்களில் ரெய்டு நடத்தினர்.

இதில் அதிகாலை 4.30 மணி வரை சட்டவிரோதமாக பார்கள் செயல்பட்டது தெரிய வந்தது. இதில் 40 முதல் 50 பேர் பார்ட்டி நடத்திக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் போதைப்பொருளும் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். வழக்கமாக பார் அதிகாலை 1.30 மணிக்கு முடிந்துவிடும். அதன் பிறகு இந்த சிறப்பு பார்ட்டி தொடங்கி காலை வரை நடந்தது தெரிய வந்தது. இதனை தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த 4 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு அதிகாரிகள் ரெய்டு நடக்கும் இடத்திற்கு செல்லும்படி உத்தரவிட்ட பிறகும் அவர்கள் அங்கு செல்வதை தவிர்த்துவிட்டனர் எனச் சொல்லப்படுகிறது. பார் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்தது தொடர்பாக 8 வெயிட்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புனே போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தப்பட்ட பாரில் சட்டவிரோத கட்டுமானம் இருந்தால் அதனை புல்டோசர் கொண்டு இடிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஷிண்டே, போதைப்பொருளுடன் தொடர்புடைய சட்டவிரோத கட்டுமானங்கள் மீது புல்டோசரை கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *