இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சரொருவர், இந்த விவகாரத்தில் மம்தாவை சுட்டிக்காட்டும் விரல்கள் உடைக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த எச்சரிக்கையை வெளிப்படுத்திய மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா, “இந்த சம்பவம் தொடர்பாக மம்தா பானர்ஜியை சுட்டிக்காட்டுபவர்களையும், சமூக வலைதளங்களில் அவரைத் தவறாகப் பேசுபவர்களையும், ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்துபவர்களையும் அடையாளம் கண்டு, அவர்களின் விரல்கள் உடைக்கப்படும்.
இல்லையெனில், மேற்கு வங்கத்தை இவர்கள் வங்கதேசமாக மாற்ற முயற்சிப்பார்கள். மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்ட பிறகும்கூட, போலீஸார் யார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. இங்கு, வங்கதேசம் மாதிரியான சூழ்நிலை ஏற்பட போலீஸ் ஒருபோதும் அனுமதிக்காது. வங்கதேசத்தில் எப்படி நடந்தது போன்ற சூழ்நிலையை இங்குள்ள அரசு அனுமதிக்காது. மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
இதே போன்று, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண் பயிற்சி மருத்துவர்களை எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார். பங்குராவில் நேற்று நடந்த பேரணியில் உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அருப் சக்ரவர்த்தி, “போராட்டம் என்ற பெயரில் நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம் அல்லது உங்கள் காதலனுடனும் செல்லலாம். ஆனால், உங்களின் வேலைநிறுத்தத்தால் ஒரு நோயாளி இறந்தாலோ, அதனால் உங்கள்மீது பொதுமக்கள் கோபம் கொண்டாலோ, நாங்கள் உங்களைக் காப்பாற்ற மாட்டோம்” என்று கூறியிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88