ரோமில் நடைபெற்ற ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் UNGA அமைப்பின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 800 மில்லியன் மக்களை “வறுமையிலிருந்து மீட்டெடுத்த இந்தியா’ என்று அடிகோடிட்டு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ( FAO) 78-வது பொதுக்கூட்டத் தொடர் ரோமில் நடைபெற்றது. “ நடப்பு மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான பூஜ்ஜிய பசியை நோக்கிய முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார் டென்னிஸ் பிரான்சிஸ்.
தனது உரைக்குப் பின்னர் ஐ.நா தூதர்கள், அதிகாரிகள், கொள்கை வல்லுனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், வங்கி அமைப்புடன் ஒருபோதும் தொடர்பு கொள்ளாத இந்திய கிராமப்புற விவசாயிகள் இப்போது அவர்களின் அனைத்து வணிகங்களையும், பரிவர்த்தனைகளையும் தானே மேற்கொள்கின்றனர். ஸ்மார்ட் போன்கள் மூலம் அவர்களின் பில்களை செலுத்துதல் மற்றும் ஆர்டர்களுக்கான கட்டணங்களை பெறுதல் என அனைத்தையும் இணைய வழியில் பரிவர்த்தனை செய்கின்றனர்.