மர இழைப்பகத்தில் திடீர் தீ விபத்து… ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

திருவாரூரில் மர இழைப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

பேபி டாக்கிஸ் ரோடு பகுதியில் கலியபெருமாள், அண்ணாமலை ஆகியோருக்கு சொந்தமான மர இழைப்பகம் மற்றும் பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இதன் அருகே, 500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளும் உள்ளன. இந்நிறுவனத்தில் தீ பற்றி எரிந்தது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அவர்கள் சற்று தாமதமாக வந்ததால், மரப்பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே பேபி டாக்கிஸ் ரோடு பகுதியில் கலியபெருமாள் அண்ணாமலை என்பவர்களுக்கு என்விடி மர இழைப்பகம் என்ற பெயரில் மர இழைப்பகம் மற்றும் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனமானது, திருவாரூரில் பிரசித்தி பெற்ற பழமையான நிறுவனமாகும். இந்த மர இழைப்பகத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதையும் படிக்க: 
மக்களே உஷார்.. இன்று இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. வானிலை எச்சரிக்கை!

விளம்பரம்

இதனை கண்ட பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், இரண்டு தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரை எடுத்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், மர இழைப்பு நிறுவனத்தில் இருந்த தேக்கு மரங்கள், பர்னிச்சர்கள், ஸ்கூட்டி உள்ளிட்ட வாகனம் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மர இழைப்பகத்தின் அருகாமையில் அழகிரி காலனி மற்றும் சீரா தோப்பு ஆகிய பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த தீ விபத்து உரிய நேரத்தில் கட்டுப்படுத்தப்படவில்லை எனில், இந்த பகுதி முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

விளம்பரம்
உங்கள் நரம்புகளை பலப்படுத்தும் வைட்டமின் பி12 நிறைந்த 7 உணவுகள்.!


உங்கள் நரம்புகளை பலப்படுத்தும் வைட்டமின் பி12 நிறைந்த 7 உணவுகள்.!

ஆற்றில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருக்கும் நிலையில் தீயணைப்பு வாகனம் தண்ணீரை வேகமாக எடுத்து வந்து தீயை அணைக்க உதவியதாக இருந்தது எனவும், இருப்பினும் தீயணைப்பு வாகனம் வருவதற்கு சற்று காலதாமதம் ஆனதே மர இழைப்பகம் முழுமையும் எரிந்து நாசமானதற்கு காரணம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்து திருவாரூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தானது மின்சார கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *