தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் 25-வது ஆண்டு நினைவஞ்சலி நெல்லை தாமிரபரணி நதியில் அனுசரிக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாக வந்த கிருஷ்ணசாமி, தாமிரபரணி நதியில் இறங்கி மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குறித்து நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை வரும் ஜூலை 30-ம் தேதி நடைபெறுகிறது. அரசின் பார்வையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குறித்த கோளாறு இருக்கிறது. இன்னமும் சரியான புரிதல் தமிழக அரசுக்கு இல்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு புலியை வளர்ப்பது ஏன்? எலியை வளர்ப்பது ஏன்? மக்களின் வாழ்வுரிமையை பறித்து விட்டு வனத்துறை அமைச்சர், சுற்றுலாவை வளர்ப்பது ஏன்?