சேலம் மாவட்டத்தில் கூடைப்பந்து போட்டியில் தோல்வியடைந்த பள்ளி மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் ஷூ காலால் எட்டி உதைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் நிர்மலா மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் நடந்த கூடைப்பந்து போட்டியில் நிர்மலா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை வரிசையில் அமர வைத்து, சரமாரியாக திட்டி, கன்னத்தில் அடித்து, சில மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க:
சுதந்திர தின லீவுக்கு ஊருக்கு போறீங்களா… ரயில் பயணிகளுக்கு வந்த செம குட் நியூஸ்!
இந்த காட்சியை சிலர் தங்கள் செல்போன்களில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். மாணவர்களை ஆசிரியர் தாக்கும் இந்த காட்சியை கண்ட பெற்றோர், ஆசிரியர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
.