மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.300 கோடி நிதி

மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாநகரப் போக்குவரத்து கழகத்தை தரம் உயர்த்தும் வகையில் , உலக வங்கியின் நிதி உதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டில் மாநகரப் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 10 சதவிகித பேருந்துகளின் வரவு – செலவு வித்தியாசத் தொகையாக 21 கோடியே 50 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

அதன் தொடர்ச்சியாக தற்போது 50 சதவிகித பேருந்துகளின் வரவு- செலவு வித்தியாசத் தொகையாக 300 கோடி ரூபாயை, மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெம்பக்கோட்டை அகழாய்வில் அரிய வகை பொருள் கண்டெடுப்பு.. ஆய்வாளர்கள் ஆச்சர்யம்!

அதேபோல பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, கலைஞர் நகர், பெரும்பாக்கம் ஆகிய 6 பணிமனைகள் மூலம் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும், இதற்காக 111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *