தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாலினுக்கு மனசாட்சி இல்லை. மூன்றரை வருடங்களில் மூன்று முறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கலாமா எனப் பேசும்போதே `மின்சாரக் கட்டணம்… ஷாக் அடிக்கிறது” என ஸ்டாலின் கூறினார். ஸ்டாலின் மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். தற்போது வரை அதை நிறைவேற்றவில்லை. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்துள்ளார்.
மின்சார உயர்வால் தண்டமாக பணம் கட்ட வேண்டி உள்ளது. மின் கட்டண உயர்வால் தோசை, இட்லி, டீ, வடை, பஜ்ஜி விலை ஏறுகிறது. ஜல்லி, சிமென்ட், கம்பி விலையும் உயர்கிறது. மணல் கொள்ளை, கொலை, கொள்ளை, கடன் வாங்குவது, சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சொல்வதை செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என ஸ்டாலின் கூறினார். ஆனால் மின்சாரக் கட்டணம் மாதம் ஒரு முறை வசூலிக்கப்படும் எனத் தெரிவித்தார்… செய்யவில்லை. சொல்லாமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது” என்றார்.