முதல்வர் ஆதித்யநாத்திற்கும், துணை முதல்வர் கேசவ் பிரசாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேசவ் பிரசாத் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து இது குறித்து பேசினார். இப்பேச்சுவார்த்தையில் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டாலும், உண்மையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக புகார்களை தெரிவிக்க இச்சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. இது தவிர உத்தரப்பிரதேச பா.ஜ.க தலைவர் புபேந்திர செளதரியும் டெல்லியில் தனியாக பா.ஜ.க தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். உத்தரப்பிரதேச பா.ஜ.கவிற்கும், மாநில அரசுக்கும் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கருத்து வேறுபாடுகளை களையே இச்சந்திப்புகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் யோகியுடன் கருத்து வேறுபாடு? – பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்த உ.பி துணை முதல்வர்! | Yogi Adityanath at odds with Deputy Chief Minister in Uttar Pradesh: Amit Shah consults PM
