`முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி டிசம்பர் மாதத்தை தாண்டாது!’ – புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி சொல்வதென்ன? | Puducherry Congress MP said about chief minister Rangasamy’s rule

அவ்வாறு நிரப்பினால் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது. பட்ஜெட்டிற்கு அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் ஓ.பி.சி-யைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. அதானி தவறு செய்துள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதை விசாரிக்க செபியின் தலைவரிடம் அறிக்கை கேட்டனர். ஹிண்டன்பர்க்கோ, `அந்த கம்பெனியில் ஷேர் வைத்துக்கொண்டு முதலாளியாக இருக்கிறார்’ என்று செபி தலைவர் மீது குற்றம் சுமத்தி உள்ளது. அதனால் நாடாளுமன்ற குழுவை அமைத்து செபி தலைவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டதற்கு, பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட யாரும் பதிலளிக்க வில்லை. அதை கண்டித்தும், செபி தலைவர் மீது விசாரணை நடத்தக் கோரியும் 22-ம் தேதி அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நட த்தும்படி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

மோடி உடைந்து போன முக்காலியில் அமர்ந்திருக்கிறார். அதில் உடைந்து போன ஒரு கால், கயிறால் கட்டப்பட்டிருக்கிறது. அது நிலையான அரசு கிடையாது. அதேபோல புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் அரசும் டிசம்பரை தாண்டுமா என்று சொல்ல முடியாது. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் டிசம்பருக்குள் என்கின்றனர். தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் இரண்டு அரசுகளும் நிலையற்றவை. மக்களின் நம்பிக்கையை இழந்த, அருதிப் பெரும்பான்மை பெறாத ஆட்சிகள். அதனால் போரட்டத்த்திற்கு மட்டுமல்லாமல், தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *