மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து, திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவர் தயாநிதி மாறன் எம்.பி., கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் தொகன் சாஹூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில் 118.9 கிலோமீட்டர் நீளத்துக்கு, ரூ.63,246 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு முன்மொழிந்ததாக கூறியுள்ளார்.இத்தகைய அதிக செலவு மிகுந்த திட்டங்களுக்கான ஒப்புதல், சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலும், மூலப்பொருட்கள் கிடைக்கும் அளவின் அடிப்படையிலேயே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டமானது மாநில அரசின் திட்டம் எனவும், இத்திட்டத்துக்கான மொத்த செலவுகளும் தமிழ்நாடு அரசுடையது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் 56 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு அதிரடி!
கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மெட்ரோ திட்டத்துக்கென 2 ஆயிரத்து 367 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் புள்ளிவிவரங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்.
.