இன்னும் அவர்கள் அந்தக் காலத்திலேயே இருக்கிறார்கள். எடப்பாடிமீது நான் வைத்த விமர்சனம் 100 சதவிகிதம் சரியானது. அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தினமும் ஒரு முன்னாள் அமைச்சர் என்னைத் திட்டலாம், தற்குறி என்று சொல்லலாம், என் வேலையைக் கொச்சைப்படுத்தலாம், `ஆட்டை வெட்டலாம்” எனச் சொல்லலாம்… ஆனால், நான் எனக்கு மூன்றாண்டுகள்தான் அனுபவம் இருக்கு சரிங்க எனச் சொல்ல வரவில்லை. என்னுடைய பதிலடி அப்படித்தான் இருக்கும். அது சரியா தவறா என்று காலம் முடிவுசெய்யும். 70 வயது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் டை அடித்துக்கொண்டு இளைஞர் என்கிறார்கள்.
இளைஞர் என்பது செயலில் இருக்க வேண்டும். 53 வயது ராகுல் காந்தியை இளைஞர் என்று சொல்கிற அளவுக்கு மோசமாகிவிட்டது, ஸ்டாலின் எத்தனை வயதுவரை இளைஞரணித் தலைவராக இருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு 50 வயது, அவர் இளைஞரணித் தலைவர். இவர்கள் யாரும் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். உள்ளதைப் பொறுத்தவரை இன்றைக்கும் பிரதமர் இளைஞர்தான். அண்ணாமலையைப் போன்ற இளைஞரை அவர்தான் கொண்டுவந்திருக்கிறார். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY