இறுதியாக பேசிய எடப்பாடி, ‘ நமது செயற்குழு நடத்தும் அதேநாளில் மா.செ-க்கள் கூட்டத்தை தி.மு.க நடத்துகிறது. அந்த அளவுக்கு நம் மீது தி.மு.க பயத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நம்மை அங்கீகரிக்கவில்லை என்று சோர்ந்துவிடாதீர்கள். எம்.ஜி.ஆர்., அம்மா காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்திருக்கிறது. கட்சிக்கு துரோகம் செய்த சிலரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது யாரின் தனிப்பட்ட முடிவும் இல்லை; அது கட்சி எடுத்த முடிவு. அதேபோலத்தான், பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம் என்பது தொண்டர்கள் எடுத்த முடிவு. அது குறித்துப் பேசி எந்தப் பயனும் இல்லை. சுயமரியாதையை இழந்து, யாரிடமும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியம் அதிமுக-வுக்கு இல்லை. அப்படி நாம் நிற்கப்போவதும் இல்லை.
இனி நமக்கு வேலை நிறைய இருக்கிறது. அதைச் செய்வதில் உறுதியாக இருப்போம். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்துத் தலைமைக் கழக நிர்வாகிகள் நல்ல முடிவு எடுப்போம். நீங்கள் கட்சி வேலையைச் செய்வதில் முதலில் ஆர்வம் காட்டுங்கள்’ என்றார். கூட்டம் நிறைவடையும் முன்பாக, மண்டலவாரியாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டது. அது குறித்த அறிவிப்பை, தயார் செய்து தலைமைக் கழகம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல, எம்.ஜி.ஆர் மனைவியான ஜானகிதான், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இடம் கொடுத்தார். அதன் நினைவாக, அ.தி.மு.க சார்பில் அவருக்கு நூற்றாண்டு விழா எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றனர் விரிவாக.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம், கே.சி.வீரமணி ஆகியோர் தனிப்பட்ட பிரச்னையின் காரணமாக, செயற்குழுவில் பங்கேற்கவில்லை. மேலும், நில மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே இருக்கும், கரூர் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் செயற்குழுவில் பங்கேற்கவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88