விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ரூ. 250 கோடி செலவு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்கும், பொதுத் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணத்தால் திமுக வெற்றிபெற்றிருப்பதாக கூறினார். திமுக வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். தேர்தல் ஆணைய தலைவர் அந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல.

ரூ. 250 கோடி செலவு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குவிந்து 3 தவணையாக பணம் கொடுத்தனர். அரிசி, பருப்பு, பணம் மூக்குதி என பலவற்றை கொடுத்தார்கள்.

விளம்பரம்

தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறதா? அவர்களுக்கு எதற்கு சம்பளம்? பணம் பொருள் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவில்லை.  விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை.

இதையும் படிங்க:  
இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு போறீங்களா? இலவசமாக பயணம் – மெட்ரோ ரயில் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு!

ஜெயலலிதா இருந்த போது, அதிமுகவினர் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது அதிமுகவிர் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். இடைத்தேர்தலில் முடிவு பொதுத்தேர்தலில் எதிரொலிக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

விளம்பரம்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *