மறைந்த நடிகர் விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகர் விஜய் சென்றார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை காட்சிப்படுத்தியுள்ளனர். விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்திக்கொள்ள பிரேமலதா விஜயகாந்த் அனுமதி அளித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று பிரேமலாத விஜயகாந்த்தை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது அவருடன் கோட் திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
.
- First Published :