விஜய் அரசியலுக்கு வருவதால், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கு அண்மையில் வந்த மத்திய பிரதேச முதலமைச்சர் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களிடம் அதிக முதலீடுகளை ஈர்த்துச்சென்றுள்ளதாக கூறினார்.
மேலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெருக்குவதில் முதலமைச்சரின் கவனம் இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க:
தமிழக மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தொடர்ந்து பேசிய அண்ணாமலை 2026ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க வாய்ப்புள்ளதாகவும், பாஜக கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்லப்போவதாகவும் தெரிவித்தார்.
2026 ல் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, மற்றும் விஜய் என நான்கு முனை போட்டி இருக்கும் என கூறினார். விஜய்யை தாம் வரவேற்பதாகவும், சீமானும் பலமாக இருக்க வேண்டும் என்றும் கூறிய அவர், மக்கள் வேட்பாளர்களை பார்த்து வாக்கு செலுத்த உள்ளதால், 2026 ஆம் ஆண்டு அரசியல் களமே மாறும் என தெரிவித்தார்.
மேற்லும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி ஆட்சி என்று அறிவித்தால் தற்போதிய கூட்டணி மாற வாய்ப்புள்ளதாக கூறினார்.
.