வேலூர்: ராமதாஸ் குறித்து அவதூறு வீடியோ; திமுக பேச்சாளர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!- என்ன நடந்தது? | pmk cadres urging police to take action against dmk cadre in vellore

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர் குமரன். தி.மு.க-வில் பேச்சாளராகவும், கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராகவும் இருந்து வந்த குமரன், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ஆகியோர் குறித்து தகாத வார்த்தைகளால் பேசிய ஆடியோ வெளியானதால், தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார். கட்சியில் இருந்து ஓரங்கப்பட்ட ஆத்திரத்தில், அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறாக பேசி குறித்து தொடர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு வந்தார் குமரன்.

குடியாத்தம் குமரன்குடியாத்தம் குமரன்

குடியாத்தம் குமரன்

இதையடுத்து, 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் குறித்து தகாத வார்த்தைகளால் திட்டி ஆடியோ வெளியிட்டதால், குமரன் கைதுசெய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த பிறகும், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்தி குறித்து அவதூறாக பேசி மீண்டும் காவல் நிலையம் சென்றார். தொடர்ந்து, அ.தி.மு.க பேச்சாளரும், நடிகையுமான விந்தியா குறித்தும் அவதூறாகப் பேசியதால், சென்னை சைபர் க்ரைம் போலீஸார், குமரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *