`வேலை செய்யாதவர்களுக்கும் பணம்’ 100 நாள் வேலை திட்ட முறைகேட்டில் ஆதங்கப்பட்ட நீதிபதிகள்! | Madurai high court bench order to theni collector

ஊராட்சித் தலைவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார். ஆண்டிப்பட்டி திட்ட மேம்பாட்டு அலுவலரும், அவருடன் இணைந்து பணியாளர்களின் வருகை பதிவேட்டை மறைத்துவிட்டனர்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை உயர் நீதிமன்றம் மதுரை கிளை

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

வேலை பார்க்காத பலரது பெயர்களை குறிப்பிட்டு ஊதியம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, தேனி மாவட்டம், பழையகோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பழையகோட்டை ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரை மாற்றிவிடலாம்’ என்று ஆதங்கப்பட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேனி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *