`இரண்டும் வெவ்வேறு!’
முதல்வர் ஒரு பக்கம் எடப்பாடியை விமர்சனம் செய்துகொண்டிருக்கும் நிலையில், அண்ணாமலை மறுபக்கம் எடப்பாடியைக் கடுமையாகச் சாடுகிறார். ஏற்கெனவே திமுக, பாஜக-வுடன் உறவு கொண்டாடுகிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், அரசியல் களத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “ஒரு பிரதான எதிர்க்கட்சியாக நாணயம் வெளியீட்டு விழா குறித்து எடப்பாடி ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என்று பேசியது சிறப்பான ஒன்று. அதைக் கேட்கும், படிக்கும் சாதாரண மக்களுக்கு “ஆம் ஏன் ராகுலை அழைக்கவில்லை… திமுக, பாஜக-வுடன் உறவு கொண்டாடுகிறதோ’ என்ற கேள்வி எழுந்திருக்கும். எடப்பாடி சரியாக ஒரு காய்நகர்த்திவிட்டார்.
அதற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் முதல்வர், `இது மத்திய அரசு நிகழ்ச்சி அது, இது’வென்று எடப்பாடி பேசியதற்கு எதிர்வினையாற்றினார். அதோடு, அண்ணா மீது ஆணையாகப் பாதை மாற மாட்டோம் என்று கூட்டணிக் கட்சிகளுக்கும் தகவல் சொல்லிவிட்டார். இவர்கள் இருவரும் மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்க, நாம் டைம்லைனிலேயே இல்லையே என்று அண்ணாமலையும் இது குறித்துப் பேசி நாங்களும் இருக்கிறோம் என்று தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. இதைத் தாண்டி, இதில் அரசியல் இருக்கிறது. அதேநேரத்தில் இருவரும் சேர்ந்து எடப்பாடியைக் கட்டம்கட்டுகிறார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. முதல்வர் எடப்பாடியை விமர்சனம் செய்து பேசுவது வேறு அரசியல். அண்ணாமலை செய்யும் விமர்சனத்தின் காரணம் வேறு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கவே முடியாது” என்றார்கள் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88