இதையடுத்து, இவ்வழக்கில் பல்விந்தர் குமார் சர்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1.50 லட்சம் அபராதமும், சுனிதாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சுசிலாவுக்கு அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவர் ஏற்கெனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதான குற்றத்தை, அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்காததால், அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், நீதிபதி தனது தீர்ப்பில், இதுபோன்ற குற்றங்கள் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதற்கும், ரத்து செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. இதனால், அரசு ஆட்தேர்வில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தேர்வுக்காக நேர்மையான முறையில் தயார் செய்து, தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் நபர்களை கடுமையாக பாதிக்கிறது. இது சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் குலைக்கிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கடுமையாகக் கையாளப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என தெரிவித்திருந்தார்.
வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டின் மிகப்பெரிய கவலையளிக்கும் பிரச்னையாக உள்ள நேரத்தில், இதுபோன்ற போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு நிகழ்வுகள், ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வுகளில் தாமதத்தை அதிகரித்து, அரசின் நிர்வாகத் துறைகளின் செயல்பாடுகளை மோசமாக பாதிக்கிறது. இச்செயல்களைத் தடுக்க தற்போது இயற்றப்படவுள்ள பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் 2024, மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன்மூலம், இத்தகைய முறைகேடுகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளும், பொதுத் தேர்வுகளில் அதிக வெளிப்படைத் தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்டு வர முடியும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88