தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக தெலங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலையும் கூட தோல்வியை தான் சந்தித்தனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், தமிழிசைக்கும், அண்ணாமலைக்கும் கட்சிக்குள் மோதல் நிலவுவதாகப் பேச்சுக்கள் அடிபட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் மேடையிலேயே தமிழிசையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டிக்கும் தொனியில் பேசுயதாக வீடியோ வெளியாகி சர்ச்சையானது.