அங்கன்வாடி: `அழகான கட்டடம்; ஆசிரியர்கள்… இருந்தும் மாணவர்கள் இல்லை?’ – காட்டமான நாமக்கல் ஆட்சியர் | namakkal collector slams officials in school admission issue

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியத்தில் ரூ.66.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் 4 புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நிகழ்ச்சி நடக்கும் அங்கன்வாடி மையம் முன்பே டெங்கு கொசுக்களை பரப்பக்கூடிய வகையில் டயர்கள், சுகாதாரமற்ற முறையில் மழை நீர் தேங்கியிருப்பதை கண்டு காட்டமானார்.

“எத்தனை முறை சொல்வது, டெங்கு காய்ச்சல் பரவுகிறது, வீடு வீடாக கண்காணித்து மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நிகழ்ச்சி நடக்கும் இடத்திலேயே இவ்வளவு சுகாதாரமற்ற நிலையில் வைத்துள்ளீர்களே?” என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார் .

தொடர்ந்து அருகில் இருந்த அங்கன்வாடி ஊழியரை எத்தனை குழந்தைகள் படிக்கிறார்கள் என கேட்டபோது, `மொத்தமாக 15 பேர் உள்ளார்கள்’ என கூற, ஆட்சியரோ, `1200 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் 15 பிள்ளைகள் மட்டும்தான் படிக்கிறார்களா?” என கேள்வி எழுப்பினர்.

அங்கன்வாடி மையம்அங்கன்வாடி மையம்

அங்கன்வாடி மையம்

இதைக்கேட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், “எல்லா குழந்தைகளையும் தனியார் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள்” என கூறவே கோபமடைந்த ஆட்சியர் , “என்ன அடிப்படை வசதிகள் இல்லை நம் அரசு பள்ளியில். அழகான கட்டடம், சிறப்பான ஆசிரியர்கள் உள்ள நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கூட அரசு பள்ளியில் தங்கள் பிள்ளையை சேர்க்கவில்லை என்றால் இத்தனை அரசு அதிகாரிகள் இங்கிருந்து என்ன பயன்?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

“அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் அரசு அதிகாரிகளின் கடமை, அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் தான் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வரும் காலங்களில் இப்படி இருக்கக் கூடாது” என கண்டித்தார்.

வெண்ணந்தூர் ஒன்றியத்தில் நாச்சிபட்டி, சௌதாபுரம், பழந்தின்னிப்பட்டி ஆகிய கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். உடன் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *