தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, ”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மையபடுத்திதான் தமிழக அரசியல் உள்ளது என்பதற்கு அடையாளம்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து உள்ளனர். அவரை விமர்சித்தவர்கள் எல்லாம் அவரின் பெயர், படத்தை பயன்படுத்துகிற நிலைக்கு வந்துள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அரசியல் லாபத்திற்காக அவரது புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளனர். டி.டி.வி தினகரனுக்கும் அ.தி.மு.கவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவ்வப்போது அரசியலில் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே சசிகலா ஏதேதோ பேசி வருகிறார். அ.தி.மு.கவில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே அவரது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த முடியும்.
தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளை பா.ஜ.க கண்டு கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காகதான் பா.ஜ.கவுடனான கூட்டணியை விட்டு அ.தி.மு.க வெளியேறியதே தவிர அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை க்காக அல்ல. அண்ணாமலை எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
தமிழர்களுக்கு எதிரான விரோத போக்கை பா.ஜ.க கடைபிடித்ததால்தான் தமிழக தேர்தலில் பா.ஜ.கவின் வாக்கு வங்கி உயரவில்லை. 12 கட்சிகளோடு கூட்டணி வைத்தும் 12 சதவீத வாக்கு வங்கியைக் கூட பா.ஜ.கவால் பிடிக்க முடியவில்லை. டாக்டர் பட்டம் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது அவர்கள் ஆட்சி காலத்தில் வேண்டுமானால் அவ்வாறு செய்து இருக்கலாம். அவ்வாறு கொச்சைபடுத்துவது கண்டிக்கத்தக்கது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88