“தமிழ்நாடு பா.ஜ.க-வில் இணைந்ததிலிருந்தே நீங்கள் ஆக்டிவ்வாக இல்லை என்ற விமர்சனம் இருக்கிறது… பிறகெதற்கு பா.ஜ.க-வில் தொடர்ந்து பயணிக்க வேண்டும்?”
“பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலத் தலைவராக இருந்த சமயத்தில் பா.ஜ.க-வில் இணைந்தேன். அடுத்த சில நாள்களில் மோடி தமிழ்நாடு வரும்போது என்னை சந்திக்கவிடாமல் செய்தார்கள். தொடர்ந்து 2014 நாடாளுமன்ற தேர்தலில் நான் பிரசாரமும் செய்யவும் முட்டுக்கட்டை போட்டார்கள். இதே நிலை 2024 நாடாளுமன்ற தேர்தல்வரையிலும் நீடிக்கிறது. தகுதியில்லாதவர்கள் தலைவராக வந்ததனால், தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் அவர்களிடம் இருப்பதாக கருதுகிறேன். சொல்லப்போனால் வடிவேல் நடித்த `வண்டு முருகன்` அரசியல்வாதிகள்தான் பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்மைகாலமாக இருக்கின்றனர். இருந்தாலும் மோடி செல்லுக்கிணங்க பா.ஜ.க-வில் இணைந்ததால் தொடர்ந்து பயணிக்கிறேன்”
“அரசியலில் அண்ணாமலை பூஜ்ஜியம் என்பீர்கள்… ஆனால் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்காமலேயே பா.ஜ.க 10 சதவீதத்தை கடந்துவிட்டதே!”
`கொங்கு மண்டலத்தில் நானா எடப்பாடியா.. பார்த்துவிடுவோம் என்ற அகந்தையில்தான் கூட்டணி முறிய வழிவகுத்தார் ஈகோ அண்ணாமலை. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி அமைந்து கணிசமாக எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்றிருந்தால் பெரும்பான்மைக்கு யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் வந்திருக்காது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே அண்ணாமலையை மாற்றிருந்தால் கூட்டணியும் அமைந்திருக்கும். பெரும்பான்மையும் கிடைத்திருக்கும். இப்படியான படுதோல்வியை கொடுத்ததற்கு அண்ணாமலை வெட்கப்பட்டு பதவி விலகியிருக்க வேண்டாமா? ”
“அண்ணாமலை கோவையில் தோற்றுப் போனதால்தான் பட்டாசு வெடுத்து கொண்டாடினீர்களா?”
“பட்டாசு வாங்கும் அளவுக்கெல்லாம் அண்ணாமலையெல்லாம் வொர்த்தே கிடையாது. நான் மோடி மீண்டும் பிரதமராக தேர்வானதை கொண்டாடவே பட்டாசு வெடித்தேன். மோடி மூன்று முறை பிரதமராக இருப்பார் என 2013-ம் ஆண்டு அவரிடமே சொன்னேன். பிரதமரின் உண்மையான `வில் பவர்` என்னவென்பதை இந்த ஆட்சியின்மூலம் தெரிந்து கொள்வீர்கள்”
“நீங்கள் பா.ஜ.க-வை திட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்.. ஆனால் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகிவிட்டார்கள்!”
“தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சி தலைவர்களெல்லாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என கருதுகிறார்கள். பா.ஜ.க-வின் இந்த கூட்டணி விரைவிலேயே உடைந்துபோகும். உண்மையை சொன்னால், தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க அ.தி.மு.க மீதுதான் தேசியக் கட்சிகள் சவாரி செய்ய வேண்டிய நிலையே இருக்கிறது.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88