அதே நேரம், அ.தி.மு.க ஆதரவாளர்களும் இந்தத் தேர்தலை புறக்கணிப்பார்கள் என நினைத்தது அ.தி.மு.க தலைமை. ஆனால், விக்கிரவாண்டியில் நடந்து முடிந்த தேர்தலில், 80 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குப் பதிவாகியிருக்கிறது. இதன்மூலம் அ.தி.மு.க ஆதரவாளர்கள் சம்பவம் செய்திருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. அதே நேரம், அ.தி.மு.க-வின் வாக்கு யாருக்கு சென்றிருக்கும் என்ற கேள்விக்கு விடை ஜூலை 13-ல் தெரியவரும் என்றாலும், நமது விகடன் வலைப்பக்கத்தில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க களத்தில் இல்லாதது யாருக்கு சாதகம்” எனக் கேள்வி எழுப்பி,
அதற்கு விடையாக, பா.ம.க – தி.மு.க – நா.த.க என மூன்று விருப்பத் தேர்வுகளை கொடுத்து கருத்துக்கணிப்பு நடத்தினோம்.
இதில் ஏராளாமான வாசகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்திருந்தனர். இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க களத்தில் இல்லாததில், தி.மு.க-வுக்கு சாதகம் என 57 சதவிகித வாசகர்களும், பா.ம.க-வுக்கு சாதகம் என 29 சதவிகித வாசகர்களும், நா.த.க-வுக்கு சாதகம் என 14 சதவிகித வாசகர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.