“அதேநேரத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருந்தால் ஒருசில இடங்களில் பா.ம.க-வுக்கு வெற்றி கிடைத்திருக்கும் என்ற கருத்துக்கள் பரவலாக எழுந்திருக்கிறதே?”
“அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க சேர்ந்து இருக்க வேண்டும் என மருத்துவர் அன்புமணி விரும்பினார். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் அது நடைபெறவில்லை. நாடாளுமன்ற தேர்தல் என்பதால், பா.ஜ.க வேண்டாம் என நாங்கள் முடிவு செய்திருந்தால், ‘இந்தியா’ கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அங்கு யார் இருக்கிறார்கள்?. இந்தியா நாட்டின் பாதுகாப்பை யாரிடம் கொண்டு போய் கொடுக்க போகிறோம். எனவேதான் பா.ஜ.க கூட்டணியை முடிவு செய்தோம். மூன்று கட்சிகளும் ஒரு அணியில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சம்பவங்களுக்கு இடையில் விமர்சனம் வைக்க வேண்டுமே தவிர, தனி மனிதர்கள் மீது வைக்க கூடாது. அ.தி.மு.க-வும் கட்சிக்காக, நாட்டுக்காக என யோசித்து இருக்க வேண்டும். நீங்கள் கூறுவது போல அ.தி.மு.க-வுடன் சேர்ந்து வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றியை வைத்து என்ன செய்ய முடியும்?. நாடாளுமன்றத்தில் என்ன தாக்கம் ஏற்பட போகிறது என்பதும் இருக்கிறதே?”