அதிமுக-வின் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்த `நாம் தமிழர்’ கட்சி… பின்னணியில் இடைத்தேர்தல் கணக்கா?! | Reason Behind Ntk’s Support to admk Protest?

இதுகுறித்து விளக்கம்கேட்டு நா.த.க-வின் தமிழ்மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைச் செல்வனிடம் பேசினோம், “இடைத்தேர்தலை மனதில் வைத்தே, அ.தி.மு.க-வின் போராட்டத்துக்கு ஆதரவளித்தோம் எனப் பேசுவது காழ்ப்புணர்ச்சி அரசியல். கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசு, இவ்விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிக்க முயலும் எதிர்க்கட்சியையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.

கார்த்திகைச் செல்வன்கார்த்திகைச் செல்வன்

கார்த்திகைச் செல்வன்

எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் தி.மு.க அரசின் எதேச்சதிகாரப்போக்கை வேடிக்க பார்க்கச் சொல்கிறீர்களா? ஜனநாயக படுகொலை அரங்கேறுவதால் அ.தி.மு.க மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் ஜனநாயக மாண்புகளை காக்க தார்மீக அடிப்படையில் அதரவு கொடுப்பதென்பது ஆரோக்கிய அரசியல். திராவிட கண்ணாடி அணிந்திருப்பர்களின் பார்வையில் எல்லாமே வாக்கு அரசியலாகத்தான் தெரியும். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க-வுக்கு விக்கிரவாண்டி தேர்தலில் பேரரடி காத்திருக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *