சிவசேனாவுடன் நீண்டகாலம் கூட்டணியில் இருந்த பா.ஜ.க-தான், சிவசேனாவை உடைத்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்யைக் கவிழ்த்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைவதற்கு காரணாமக இருந்தது என்று விமர்சனம் எழுந்தது. இதைக் குறிப்பிட்டு தனது எக்ஸ் தளத்தில் சமீபத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்ட சிவசேனா (உத்தவ்) தலைவர் ஆதித்யா தாக்கரே, பா.ஜ.க அதிகாரத்துக்கு வந்தவுடன், கூட்டணிக் கட்சிகளை பலவீனப்படுத்தும் வேலைகளைச் செய்யும் என்று குறிப்பிட்டிக்கிறார். மேலும், தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் மக்களவை சபாநாயகர் பதவியைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வழக்கமாக, மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான் தேர்வுசெய்யப்படுவார் என்றாலும், கூட்டணியில் ஆட்சியில் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மக்களவையில் சபாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஜி.எம்.சி.பாலயோகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி மக்களவை சபாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்றைய அரசியல் சூழலே வேறு. அதனால், மக்களவை சபாநாயகர் பதவியை அவ்வளவு எளிதாக கூட்டணிக் கட்சிகளுக்கு பா.ஜ.க விட்டுக்கொடுத்துவிடாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.!
இது ஆளும் கூட்டணி நிலை… மறுபக்கம் இந்தியா கூட்டணி சபாநாயகர் தேர்வில் ஒரே கருத்துடன் இருக்கிறார்களா என்பது குறித்தும் விவாதங்கள் கிளம்பியுள்ளது. தற்போது வரை எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ரேஸ் குறித்து எதுவும் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் தற்போது இந்தியா கூட்டணி வலுவான எதிர் கூட்டணியாக இருப்பதால், அவர்களும் தங்களின் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88