`அனைத்து இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால்..!’ – மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு |Union minister Giriraj Singh, continues to stoke the communal fire

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறை பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சியைத்  தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆட்சியில் மூன்றாவது முறை மத்திய அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டவர்களில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஒருவர். வகுப்புவாத சர்ச்சைப் பேச்சுகளுக்குப் பெயர் பெற்ற இவர் கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானதுடன்,  முசாபர்பூரில்  செய்தியாளர்களிடம் பேசியபோது, “இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. எனக்கும் அவர்களுக்காகப் பணியாற்றுவதில் விருப்பமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்கள் மீது ஒருபோதும் பாரபட்சம் காட்டவில்லை என்றாலும், எங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க அவர்கள் வழிவகுத்துவிட்டனர்.” எனப் பேசினார்.

கிரிராஜ் சிங்கிரிராஜ் சிங்

கிரிராஜ் சிங்

இது அரசியல் அரங்கில் சர்ச்சையானது. இந்த நிலையில் தற்போது மற்றொரு வகுப்புவாத பேச்சின் மூலம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். கடந்த புதன் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “1947-ல் அனைத்து இஸ்லாமியர்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருந்தால் நாட்டின் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். அனுப்பாதது இந்த நாட்டின் துரதிர்ஷ்டம். 1947-ல் நமது முன்னோர்கள் சிலர் மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டபோது அனைத்து இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், சனாதனம் மீது கலாசார தாக்குதல் நடத்தும் விதமாக யாரும் கேள்விகளை எழுப்பியிருக்க முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, “இந்த ஆண்டு மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், கடந்த வாரம் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பாஜகவின் மோசமான செயல்பாட்டிற்கு பெங்கால் இஸ்லாமியர்கள் தான் காரணம். நாமக்கு யார் வாக்களித்தார்களோ அவர்களுக்காக நாம் நிற்பது தான் சரி” எனப் பேசி இருந்தது சர்ச்சையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *