மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் என 45 பணியிடங்கள் Lateral Entry எனும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவிருப்பதாக, UPSC நிர்வாகம் வெளியிட்ட விளம்பரம், பெரும் விவாதப்பொருளானது. எதிர்க்கட்சியினர் தொடங்கி ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வரை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், Lateral Entry நியமனம் தொடர்பான அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்யும்படி, UPSC-க்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், “மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை ரத்து செய்யும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சமூகநீதியை காக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.