தற்போது இருக்கும் சட்டங்களின் பிரிவுகளை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் காலங்காலமாகக் கையாண்டு வருகிறார்கள். பெரும்பாலான சட்டப்பிரிவுகள் அவர்களுக்கு மனப்பாடமாக இருக்கும். இப்போது, புதிய குற்றவியல் சட்டங்களில் பிரிவுகள் எல்லாம் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருக்கும் பெரும் குழப்பத்துக்கு ஆளாவார்கள். இந்தப் பிரச்னையை சில நீதிபதிகளே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்படட் தேசத்துரோகச் சட்டமான பிரிவு 124 ஏ-வை நீக்க வேண்டுமென்று நீண்டகாலமாக பலரும் குரல் எழுப்பிவருகிறார்கள். அதுபோன்ற சட்டங்கள் முற்றிலுமாக நீக்கப்படாமல், அதற்கான பிரிவுகளை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். வெறுப்புப்பேச்சு என்பது சமூகத்தில் மிகவும் சீரியஸான பிரச்னையாக மாறியிருக்கிறது. அதற்கு தனியாக ஒரு பிரிவை சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திவருகிறார்கள். ஆனால், அதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை” என்கிறார் வழக்கறிஞர் சிவக்குமார்.
புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்படுவதால், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதிலிருந்து பிரச்னைகள் தொடங்கும் என்றும், நடைமுறை சார்ந்த நிறைய சிக்கல்கள் வரும் என்றும் சொல்லும் நீதித்துறை சார்ந்த தரப்பினர், இதனால் நீதி வழங்குவதில் பெரும் தாமதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88