ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார்.
அரசு முறைப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார்.
அந்த பயணத்தில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை முதலமைச்சர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க:
அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி!
கடந்த வாரம் அமெரிக்கா சென்ற தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து பல்வேறு தொழில்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் போது முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.