`அரசியலமைப்பு சட்டத்தை முத்தமிட வேண்டிய இக்கட்டில் பிரதமர் மோடி; ஸ்டாலினே அதற்கு காரணம்!’ – ஆ.ராசா | dmk mp a raja thanks giving event at ooty nilgiris

இன்று மதியம் ஊட்டி சேரிங்கிராஸ் காந்தி சிலை பகுதிக்கு வருகைத் தந்த ஆ.ராசாவிற்கு, தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய எம்‌.பி ஆ.ராசா, “நாற்பதுக்கு நாற்பது என்ற நமது இலக்கை தமிழ்நாட்டில் மக்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வெற்றி இது. மற்ற மாநிலங்களில் ஒரு இடத்தையாவது மற்றவர்கள் பிடித்திருக்கிறார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் உருவெடுத்த திராவிட தத்துவ மண் என்பதை மக்கள் புரிய வைத்திருக்கிறார்கள். இந்த வெற்றி முதல்வர் ஸ்டாலினுக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் கிடைத்த வெற்றி.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என விரும்பினோம். ஆனால், கொஞ்சம் தள்ளிப்போயிருக்கிறது. பா.ஜ.க-வின் சர்வாதிகாரத்தை தடுக்கும் வலிமையோடு எதிர் அணியில் இருக்கிறோம். மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டிருக்கிறது. மதிக்க மாட்டோம் என சொல்லிக் கொண்டிருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முத்தமிட வேண்டிய இக்கட்டிற்கு மோடியை தள்ளிய பெருமை தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினையேச் சேரும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *