`அரசியலமைப்பு படுகொலை தினம்‘ – எமர்ஜென்சியை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் பாஜக பிளான்தான் என்ன?! | modi government declared july 25 as samvidhaan hatya diwas

அதைத் தொடர்ந்து எமர்ஜென்சி விவகாரத்தை பா.ஜ.க எழுப்பியது. இந்திரா காந்தியால் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது, அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டது என்று என்று பா.ஜ.க தலைவர்கள் பேசினர்.

அதற்கு, ‘எமர்ஜென்சியின்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. அவ்வளவுதான். ஆனால், பத்தாண்டு கால மோடி ஆட்சியில் அரசை விமர்சித்த பேராசிரியர்களும், எழுத்தாளர்களும, வழக்கறிஞர்களும், செயற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் உபா போன்ற கொடூரமான சட்டங்களின் கீழ் சிறையில் கொடுமைக்கப்படுத்தப்பட்டார்கள். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. இது எமர்ஜென்சியைவிட கொடுமையானது’ என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுக்கத் தொடங்கின.

இந்த நிலையில்தான், ‘எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் திசைதிருப்பும் நோக்கத்துடன், 50 ஆண்டுகளுக்கு முந்தைய எமர்ஜென்சியை இப்போது மிகப்பெரிய விவகாரமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *