அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு குட்நியூஸ் – தமிழக அரசு வெளியிட்ட அரசாணை – News18 தமிழ்

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

இதில் 50 சதவீத வருங்கால வைப்புத் தொகை உட்பட பணப்பலனின் ஒரு பகுதியை வழங்க ரூ.38.73 கோடி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து; சூர்யாவுக்கு ஏற்பட்ட காயத்தால் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்!

இதில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடி, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களுக்கு முறையே ரூ.5.8 கோடி, ரூ.3.6 கோடி, ரூ.4.3 கோடி, ரூ.8 கோடி, ரூ.3.2 கோடி, ரூ.2.9 கோடி வழங்க வேண்டும் என்றும், இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

விளம்பரம்

இதை பரிசீலித்த அரசு, ரூ.38 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *