பசுந்தாள் உர விதைகள் எல்லா விவசாயிகளுக்கும் சேர வேண்டியதை உறுதிப்படுத்தணும். அதேபோல வேளாண் அலுவலர்கள் நேரடியாக விவசாயிகள சந்திக்கணும். ஆனா, பெரும்பான்மையான வேளாண் அலுவலர்கள் ரிமோட்லதான் செயல்படுறாங்க. அதேபோல அரசு சார்புல பாரம்பர்ய நெல் விதைகள் கொடுக்கப்படுது. அதுவும் இதே மாதிரிதான். தெரிந்த விவசாயிகள் மட்டும்தான் பயனடையறாங்க. எல்லா விவசாயிகளும் பயனடைஞ்சாதான் திட்டத்துக்கான வெற்றி கிடைக்கும்” என்றார்.
இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, “நான் விக்கிரவாண்டி தேர்தல் பணிகள்ல இருக்கிறேன். விரிவா ஒரு மேசேஜ் போடுங்க. பாத்துட்டு நடவடிக்கை எடுக்கிறேன்” என்றவர், என்ன நினைத்தாரோ, “சரி சொல்லுங்க… எந்த வட்டாரம்” என்றவரிடம் ‘வெண்பாக்கம் வட்டாரம்’ என்று தெரிவித்தவுடன் “நடவடிக்கை எடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.