அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய கருத்துகளுடன் வீடியோவை பகிர்ந்த மோடி – `இது முறையா பிரதமரே?!’ | congress moves motion against Modi for sharing expunged speech of bjp MP

பிரதமர் மோடி ஒன்றும் இப்போது புதிதாக பிரதமராகிவிடவில்லை. குஜராத்தில் எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும், முதல்வராகவும் பல ஆண்டுகள் இருந்தவர். கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருக்கிறார். அப்படியிருக்கும்போது, நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒரு கருத்தை வெளியிடக்கூடாது என்பது அவருக்கு தெரியாமல் போக வாய்ப்பே இல்லை.

அது, அவை உரிமையை மீறும் செயல் என்று தெரிந்தே வெளியிடுகிறார் என்றால் என்ன சொல்வது? பிரதமர் பதவிக்கான மரியாதைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயலாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது” என்கிறார் ராமசுப்பிரமணியம்.

பிரதமர் மோடிபிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி-யும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறார். இது தொடர்பான நோட்டீஸ் மக்களவை செயலாளரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், “அவையிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகளின் ஒரு பகுதியை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், அவை நடத்தை விதி 222-ன் கீழ் உரிமையை மீறி உள்ளது. நடத்தை விதிகளின் படி இது உரிமை மீறலுக்கு சமம். இதன் மூலம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை அவமதித்துள்ளார். எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக உரிமைமீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி மீது அவை உரிமை மீறல் விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? அவை உரிமை மீறல் என்பது தெரிந்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிடுகிறார் என்றால், நாடாளுமன்றத்தின் மீது அவர் என்ன மதிப்பு வைத்திருக்கிறார்? என்கிற கேள்வி எழுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *