ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னைய பார்க்கவே பயமா இருக்கு

சென்னையை பார்ப்பதற்கு அவ்வளவு பயமாக இருக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் குறித்து பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், தனது வீட்டின் முன்பாக நேற்று மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் போலீசாரால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாகவே இதுபோன்ற கொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அதில், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுரேஷின் சகோதரரான பாலுவும் சரண் அடைந்துள்ளார். இதையடுத்து, கொலையின் நோக்கம் தொடர்பாக சரணடைந்த நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கைதான 8 பேரில் பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவு திருநின்றவூர் மண்டலத் தலைவர் செல்வராஜூம் ஒருவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. செல்வராஜை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

இதையும் படிங்க – உணவு டெலிவரி உடையில் வந்து கொலை..! ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் நடந்தது எப்படி ?

இந்நிலையில், ஆர்ம்ஸ்ட்ராங்கின் மரணம் குறித்து பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஆர்ம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவத்தால் சென்னையை பார்ப்பதற்கு அவ்வளவு பயமாக இருக்கிறது.

விளம்பரம்

போலீசில் சரண் அடைந்தவர்கள்தான் உண்மை குற்றவாளிகள் என்று எப்படி நம்ப முடியும் என்று மனது பதறுகிறது. அவ்வளவு பெரிய கட்சித் தலைவருக்கே இந்த நிலைமை என்றால், வீட்டில் தனியாக இருப்பவர்கள், வயது முதிர்ந்தோர் அவர்களுக்கெல்லாம் எப்படி பாதுகாப்பு இருக்கும்?

விளம்பரம்

லைசென்ஸ், ஹெல்மெட்டிற்கு எவ்வளவோ சோதனை நடத்தப்படுகிறது. அது சரியான நடவடிக்கைதான். ஆனால் இவ்வளவு அரிவாளை எடுத்து வந்து கொலை செய்திருக்கிறார்கள். அதை எப்படி சோதனை செய்யாமல் தவற விட்டீர்கள். என்று கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *