பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றூ மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் தற்போது 8 பேர் சரணடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு சென்னையில் ஆற்காடு சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்டோர் இந்த வழக்கில் தற்போது வரை சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கும் போலீசார், இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?
தொழில் ரீதியாக வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங். எப்போதும் வெள்ளை கால்சட்டை மற்றும் வெள்ளை சட்டை அணிந்து காணப்படுவார்.
2000 ஆம் ஆண்டு முதல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு பிரபலமானார். அவர் 2006 இல் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல வழக்குகளை எதிர்கொண்ட அவர், அவர் மீது நிலுவையில் உள்ள பெரும்பாலான வழக்குகளில் பின்னர் இருந்து விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் முதல்வர் மாயாவதியை அழைத்து அமைந்தக்கரையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியதன் மூலம் அவர் புகழ் பெற்றார். வக்கீல்கள் குழுவைச் சுற்றி, பல தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் தலித்துகள் சட்டம் படிக்க உதவினார். ஒவ்வொரு ஆண்டும், 100க்கும் மேற்பட்டோருக்கு சட்டக் கல்லூரிகளில் சட்டம் படிக்க உதவினார்.
2011 -ம் ஆண்டு நடந்த சட்ட தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஸ்ட்ராங் தோல்வியடைந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88