சென்னை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலைப் பகுதியில் சேதமடைந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டடத்தை இடிக்கும் பணியானது, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் எந்தவித பாதுகாப்பும் இன்றி நடைபெற்று வருகிறது. கட்டடங்கள் இடிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே மக்கள் அந்தப் பாதையைக் கடந்து செல்கின்றனர். அந்த இடத்தில் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கான அறிவிப்புப் பலகை கூட வைக்கப்படவில்லை.
சென்ற வருடம், இந்தப் பகுதியிலிருந்த பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போதுதான் எதிர்பாராத விதமாக, சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள்மீது சுவர் விழுந்து, விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், மீண்டும் அதே அலட்சியப்போக்குடன் இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படுவது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போது இடிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் அடுத்தடுத்த கட்டடங்களும் இடிந்து விழும் மோசமான நிலையிலேயே இருக்கின்றன.
பணி மேற்கொள்ளப்பட்டுவரும் பகுதியைச் சுற்றிப் பாதுகாப்பு வளையமோ, மக்களை அப்புறப்படுத்துவதோ இல்லாமல் ஏற்படப்போகும் விபத்தினை அறியாமல் செயல்பட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb