நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணியில் கொ.ம.தே.க சார்பில் மாதேஸ்வரனும், அ.தி.மு.க-வில் தமிழ்மணியும், பா.ஜ.க-வில் கே.பி ராமலிங்கமும், நா.த.க சார்பில் கனிமொழி ஆகியோரும் களமிறங்கினர்.
இதில், ஆரம்பத்தில் கொ.ம.தே.க-வுக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டது. குறிப்பாக கொ.ம.தே.க மூலம் முதலில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் சூரியமூர்த்தி தொடர்பான சர்ச்சை வீடியோ வெளியாக, வேட்பாளர் மாற்றப்பட்டார். மேலும் நாமக்கல் திமுக-வுக்கும், கொமதேக-வுக்கும் இடையே இருக்கும் கோஷ்டி பூசல் வேட்பாளருக்கு நெகட்டிவ் பாயிண்டாக இருந்து வந்தது. இதுவெல்லாம் நெகட்டிவ் ஆக செல்வதை உணர்ந்த, திமுக தலைமை நாமக்கல்லில் சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டது. முதல்வரே நேரடியாக பேசினார்.
அதிமுக தரப்பில். ஆரம்பத்தில் களத்தில் இறங்கி வேலைப்பார்த்த தமிழ்மணி கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வேலைகளை கச்சிதமாக முடித்து வைத்திருந்தார். ஆனால், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அதனை முழுவதுமாக தகர்த்தெறிந்தனர்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலும் திமுக அதிமுக-வை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. காரணம், திமுக ஓட்டுகள் மாதேஸ்வரனுக்கு ஒரு பக்க பலமாக இருந்தாலும், வேட்பாளர் சார்ந்துள்ள கொங்கு சமூக ஓட்டு எங்கேயும் யூடேர்ன் அடிக்காமல் சிந்தாமல் சிதறாமல் கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் பாஜக வேட்பாளரான ராமலிங்கம் ஆரம்பத்திலிருந்தே பெரிதாக நாட்டம் காட்டாமல் இருந்து வந்தார். எனினுய்ம் திடீரென மத்திய அமைச்சரைக் கொண்டு ரோடு ஷோ நடத்தியும் பார்த்தார். ஆனால் களத்தில் ஒன்னும் எடுபடாமல் போனது. இறுதியில் டெபாசிட் கூட பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் பாஜக வேட்பாளர் கே.பி ராமலிங்கம்.
அதேப்போல தான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி. இவர் தொகுதிக்குள் எங்கே பிரசாரம் செய்கிறார் என்பது கூட தெரியாமல் தான் இருந்து வந்தது. ஆனால் ஓட்டு சதவிகிதத்தை பொறுத்தவரையிலும் பாஜக வேட்பாளரை பின் தொடர்ந்தே வந்தார்.
இந்நிலையில் தான் திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 4,57,695 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 4,29,358 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் 1,03,577 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 94,895 வாக்குகளும் பெற்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88