முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆளுநரை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.பதவி ஏற்கவிடாமல் தடுக்க ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரிடம் சொல்லி பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கலாம். அல்லது சட்டமன்றத்திற்கு வந்து ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கலாம்” என்றார்.
ஆனால் ஆளுநர் தரப்பில், `எம்.எல்.ஏ.க்களுக்கு யார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கலாம் என்பது குறித்து உச்ச் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவை மேற்கோள் காட்டியும், அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிக்காட்டியும் தனக்குத்தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும், அல்லது தான் சொல்லும் நபர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டமன்றத்தில் மூத்த பட்டியலின அல்லது பழங்குடியின எம்.எல்.ஏ.வை கொண்டு பதவிப்பிரமாணம் செய்து வைக்க அனுமதிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை. சட்டமன்றத்திற்கு சென்று பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் ஆளுநருக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சபாநாயகர் ஆளுநரின் மாண்மை குறைக்கும் வகையில் கடிதம் எழுதியதை ஏற்க முடியவில்லை. சபாநாயகர், `தான் தான் பதவிப்பிரமாணம் செய்து வைப்பேன்’ என்று கூறுகிறார்’ என்று ஆளுநர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் தங்களுக்கு இருக்கும் அதிகாரம் குறித்து சட்டவல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்துக்கொண்டிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88