இந்தியாவைச் சேர்ந்த சத்னம் சிங் (31) இத்தாலியில் கூலித் தொழில் செய்து வந்தார். இவர் இத்தாலிக்கு சட்டவிரோதமாக சென்றவர் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் சத்னம் சிங் வைக்கோல் வெட்டிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரின் கை துண்டிக்கப்பட்டது. உரிய ஆவணம் இல்லாத சத்னம் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாது என்பதால், அவரது முதலாளி அவரை குப்பை கொட்டும் இடத்துக்கு அருகில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.
இந்த தகவலறிந்து வந்த அவரின் மனைவி, இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, உடனே ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால், சத்னம் சிங் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் இத்தாலியில் தொழிலாளர் பாதுகாப்பு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பேசிய இந்திய தூதரக அதிகாரி முக்தேஷ் பா்தேசி, “இத்தாலிய அதிகாரியிடம் சத்தன் சிங்கின் உயிரிழப்புக்கு காரணமானவா் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், சத்னம் சிங் மரணத்துக்கு இத்தாலி நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய இத்தாலிப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, “இத்தாலிய மக்களுக்கு சொந்தமில்லாத இதுபோன்ற மனிதாபிமானற்ற செயலால் பாதிக்கப்பட்டவர் சத்னம் சிங்.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க உறுதியளிக்கிறேன். இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக தண்டிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இத்தாலியில் வசிக்கும் பரம்பர் சிங், “சத்னம் சிங் ஒரே நாளில் இறந்துவிட்டார். நான் ஒவ்வொரு நாளும் இறக்கிறேன். ஏனென்றால் நானும் ஒரு தொழிலாளர் பலிதான்.
வேலை செய்துகொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் என் கண் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனக்கு ஒப்பந்தம் ஆவணம் இல்லாததால் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று எனது முதலாளி கூறினார். அதனால் கடந்த 10 மாதங்களாக நீதிக்காக காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88