இந்தியக் குடும்பங்களின் கடன்கள் உயர்வு.. ஆனால் சொத்துகளும் உயர்ந்துவிட்டதாம் – ஆர்.பி.ஐ ரிப்போர்ட்! | household debt and fin assets rise according to rbi

இந்தியக் குடும்பங்களின் கடன்கள் அதிகரித்து வருகின்றன. அதே சமயம், இந்தியக் குடும்பங்களின் நிதிச் சொத்துகளும் அதிகரித்து வருவதாக ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.

ரிசர்வ் வங்கியின் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சிப் பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியக் குடும்பங்களின் நிதிநிலை பற்றிய சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன.

இந்தியக் குடும்பங்களிடம் உள்ள நிதிச் சொத்துகளின் மொத்த மதிப்பு 363.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் 135 சதவிகிதமாக உள்ளது.

மறுபக்கம், இந்தியக் குடும்பங்களின் மொத்த கடன்கள் 101.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் 37.8 சதவிகிதம் ஆகும்.

நிகர மதிப்பில் பார்த்தால், இந்தியக் குடும்பங்களின் நிகர நிதிச் சொத்துகள் 262 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் 97.2 சதவிகிதம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *